அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
14 வயதான அந்த மாணவியை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அவரது தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையாக இருக்கும் மாணவி இதுவரை இந்த துஷ்பிரயோகங்களை சகித்துக் கொண்டு வந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் கடந்த சனிக்கிழமை (15) மாலை பெரிய நீலாவணை பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸார் சந்தேக நபரை தடுப்புக்காவலில் எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி கல்முனை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கடல்தொழிலில் ஈடுபட்டவர் எனவும் மாணவியின் தாயார் நெசவு தொழிலை மேற்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தைப் பொறுத்து மேலதிக விசாரணைகள் பெரிய நீலாவணை சிறுவர், பெண்கள் பாதுகாப்புப் பிரிவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.