இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அணிக்காக Sadeera Samarawickrama 48 ஓட்டங்களுடன் டாப்ஸ்கோராக இருந்தார். கேப்டன் குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களும், பவான் ரத்நாயக்க 32 ஓட்டங்களும் சேர்த்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் மொஹம்மட் வாசிம் சிறப்பாக விளையாடி மூன்று விக்கெட்டுகளை பெற்றார். ஹாரிஸ் ரவூப் மற்றும் ஃபைசல் அக்ரம் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
212 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பதிலடியாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 44.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. மொஹம்மட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களும், ஃபகர் சமான் 55 ஓட்டங்களும், ஹுசைன் தலத் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களும் அடித்து வெற்றிக்கு துணைநின்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெஃப்ரி வாண்டர்சே மட்டும் சிறப்பாக விளையாடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் 3–0 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இலங்கை அணியை வெள்ளையடித்தது.