(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
தற்போதைய காலநிலையின் திடீர் மாற்றத்தால் அட்டாளைச்சேனை பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை நீடித்து வருகிறது. இதன் விளைவாக, பல இடங்களில் வெள்ளநீர் தேங்குதல், வீடுகள் சேதமடைவது போன்ற பல அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வேளையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ் அவர்களின் தலைமையில் மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு பல அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மழை மற்றும் வெள்ளத்தால் சிரமப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையும் அதன் கெளரவ உறுப்பினர்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்களும் தங்களுக்குத் தேவைப்படும் அவசர உதவிகளுக்கும் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
📞 தவிசாளர் – 077 727 6670
📞 உதவித் தவிசாளர் – 075 438 6196
📞 செயலாளர் – 077 935 0052
இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பாதுகாப்பும் நலனும் முதன்மை எனக் கொண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்ந்து செயல்படுகிறது.
அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையான தகவல்களைப் பகிரவும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.