Top News
| ஒன்பது வளைவுப் பாலம் மண்சரிவு அபாயத்தில் | | கடமை நேரத்தில் மாயமாக மறையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம சேவகர்கள் – தேடி அலையும் பொதுமக்கள் | | டிக்டொக்கில் அறிமுகமான நட்பினால் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை |
Dec 18, 2025

சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர் நிலையில் உள்ளதால் அட்டாளைச்சேனை–சாய்ந்தமருது வரையான பிரதேசங்களுக்கு எச்சரிக்கை

Posted on November 26, 2025 by Admin | 216 Views

அம்பாறை-இங்கினியாகல பகுதியில் அமைந்துள்ள சேனநாயக்க சமுத்திரம் தற்போது தனது அதிகபட்ச நீர் கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கல் ஓயா ஆற்றின் நீர் மட்டமும் அதிகரிப்பதால் அணை வாயில்கள் திறக்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதன் விளைவாக கல் ஓயா படுகையின் கீழ்ப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் வெள்ளப்பெருக்கால் உருவாகக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக தமண, அம்பாறை, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி உள்ளிட்ட பிரதேச செயலகப் பகுதிகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளிலும் வாழும் மக்களுக்கும் அதிக எச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது.