நாட்டில் தொடர்ந்து பதிவாகி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகள் நவம்பர் 30ஆம் திகதி வரை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை நிலைமைக்கு ஏற்ப, நவம்பர் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அனைத்து முன்பள்ளி கல்வி நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளர் கே. ஜெயவதனன் தெரிவித்தார்.
