அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பாலமுனை இரண்டு வட்டாரங்களிலும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்கான பணிகள் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டன.
மேலும் இரண்டு வட்டாரங்களிலும் மீதமாகவுள்ள வடிகான்களை துப்பரவு செய்வதற்கான பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளன. அதிக பாதிப்புள்ள முக்கிய பகுதிகள் நேற்று துப்பரவு செய்யப்பட்டன. எமது பிரதேசத்தில் விடுபட்ட ஏனைய பகுதிகளிலும், மிக விரைவாக திட்டமிட்டபடி கட்டம் கட்டமாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தனது கோரிக்கையை ஏற்று நேரடியாகக் களமிறங்கிப் பணியாற்றிய கெளரவ தவிசாளர் ஏ.எஸ் எம். உவைஸ் அவர்களுக்கும்,
மேலும் தன்னுடன் களத்தில் நின்று ஒன்றாக பணியாற்றிய உதவித்
தவிசாளர் பாறூக் நஜி, முன்னாள் தவிசாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், உட்பட பிரதேச சபை ஊழியர்களுக்கும், எமது பிரதேசத்தின் இளைஞர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை பிரதேச சபை உறுப்பினர் சிறாஜ் தெரிவித்துக் கொண்டார்.


