இலங்கை மின்சார சபையின் தேசிய கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட தகவலின்படி ரந்தம்பே – மஹியங்கனை இடையிலான மின்மாற்றிப் பாதையில் ஏற்பட்ட கோளாறே இந்த மின்தடை ஏற்பட்டதற்கான காரணமாகும்.
இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மஹியங்கனைப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. கோளாறை சரிசெய்வதற்கான பணிகளை மின்சார சபை தொழில்நுட்பப்பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.