கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மற்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஏனைய அனைத்து பரீட்சைகளகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
சமீப நாட்களில் மின்சாரத் தடை மற்றும் தொடர்பாடல் சிக்கல்கள் காரணமாக பரீட்சைகள் குறித்து விளக்கம் கோரி பொதுமக்களிடமிருந்து அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறித்த அறிவிப்பை மீண்டும் தெளிவாக வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேவையற்ற குழப்பம் அடையாமல் புதிய அட்டவணை அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.