Top News
| அம்பாறை மாவட்ட கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு | | 36 பிரதான நீர்த்தேக்கங்களும் 52 நடுத்தர குளங்களும் வான் பாய்கின்றன | | பழுதடைந்த ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு |
Dec 22, 2025

இந்திய விமானப்படையின் 2 ஹெலிகொப்டர்கள் இலங்கையில் மீட்பு பணிகளுக்கு வருகை

Posted on November 30, 2025 by Admin | 80 Views

இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இந்தியாவின் இராணுவ உதவி கிடைத்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு MI-17V5 ரக உலங்கு வானூர்திகள், மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் நேற்று (29) மாலை இலங்கையை வந்தடைந்ததாக இலங்கை விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலங்கு வானூர்திகளுடன் 22 பேர் கொண்ட விமானப்படை குழுவினரும் இலங்கையில் இறங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மற்றும் அவசர மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்காக இந்த ஹெலிகாப்டர்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு உடனடியாக பணியமர்த்தப்பட இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.