Top News
| அம்பாறை மாவட்ட கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு | | 36 பிரதான நீர்த்தேக்கங்களும் 52 நடுத்தர குளங்களும் வான் பாய்கின்றன | | பழுதடைந்த ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு |
Dec 22, 2025

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – பொதுமக்கள் அவசரமாக வெளியேறவும்

Posted on November 30, 2025 by Admin | 133 Views

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 

இதன்படி, பின்வரும் பகுதிகளில் உள்ள தாழ்வான நிலங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்: 

கடுவெல – மாலபே வீதி 

அத்துருகிரிய – மாலபே வீதி 

மாலபே முதல் பத்தரமுல்லை வரையிலான வீதிகள் 

பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.