Top News
| கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன | | தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை |
Dec 20, 2025

வென்னப்புவாவில் மீட்பு பணியில் ஈடுபட்ட இலங்கை ஹெலிகாப்டர் விபத்து

Posted on November 30, 2025 by Admin | 103 Views

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஒரு Bell 212 ஹெலிகாப்டர் அனர்த்த மீட்பு பணிகளின் போது விபத்துக்குள்ளானது. வென்னப்புவாவின் லுணுவிலப் பகுதியில் நடைபெற்ற அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்த ஹெலிகாப்டர், கிங் ஓயா பகுதியில் கீழே விழுந்ததாகத் தெரியவந்துள்ளது.

விபத்து நேரத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.