(அக்கரைப்பற்று செய்தியாளர்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களுக்கு காலை, மதிய மற்றும் இரவு உணவுகள் நேற்று (30.11.2025) வழங்கப்பட்டன. அனர்த்த நிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் கலை மற்றும் கலாசாரப் பீடம், இஸ்லாமியக் கற்கைகள் பீடம்,பிரயோக விஞ்ஞானப் பீடத்தைச் சேர்ந்த மொத்தம் 260 மாணவர்களுக்கு Iconic Youths – Sri Lanka நிறுவனம் உணவுப் பொருட்களை வழங்கியது.
சம்பந்தப்பட்ட பீடங்களின் மாணவர் ஒன்றியங்களின் வேண்டுகோளின் பேரில் இந்த உதவி வழங்கப்பட்டதுடன் இவ்வாரான இடர் காலத்தில் இச்செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

