வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் பதுளை, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் அதேபோல் குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் வாய்ப்புள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர்.