காலி மாவட்டத்தில் ஒரு கிலோ கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய மோசமான வானிலை காரணமாக காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் வர்த்தகர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
காலி கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறி கடைகள் சோதனை செய்யப்பட்ட போது ஒரு வியாபாரி கேரட்டின் விலையாக ஒருகிலோக்கு 3,500 ரூபாய் வசூலித்து வந்தது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.