Top News
| மல்யுத்த ஜாம்பவான் ஜோன் சினாவின் இறுதிப் போட்டி நாளை | | துயரத்தில் தோள்கொடுக்க அட்டாளைச்சேனையிலிருந்து புறப்பட்ட சேவை வீரர்களின் பணிகள் ஆரம்பம் | | டிட்வா பேரிடரில்கா ணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை |
Dec 13, 2025

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி 12 முதல் ஆரம்பம் – ஏனைய வகுப்புக்களுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சை கிடையாது

Posted on December 9, 2025 by Admin | 152 Views

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாமல் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ இந்த தகவலை வெளியிட்டார்.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலைக்குப் பின்னர் உயர்தரப் பரீட்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, பிற அனைத்து வகுப்புகளுக்குமான மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இந்த ஆண்டில் நடத்தப்படமாட்டாது அமைச்சு தெரிவித்துள்ளதுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) மாணவர்களுக்கு மட்டும் மூன்றாம் தவணைப் பரீட்சை வழமையின்படி இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு உறுதி செய்துள்ளது.