Top News
| வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு | | பிட்டு கேட்ட கணவனின் மண்டையை கோடாரியால் பதம் பார்த்த மனைவி | | கல்விப் பிரச்சினைகள் குறித்து கல்முனை கல்வி வலய அதிபர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை எம்பியுடன் ஆலோசனை |
Dec 16, 2025

இன்று மழையுடன் சக்திவாய்ந்த மின்னல் தாக்கம் எதிர்பார்ப்பு

Posted on December 9, 2025 by Admin | 172 Views

சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மின்னல் எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் திடீர் பலத்த காற்று வீசும் அபாயமும் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.