நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட கன மழை பெய்யக்கூடும் என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் சாத்தியம் நீடிக்கிறது. சில பகுதிகளில் 75 மில்லிமீற்றரை மீறும் கனமழையும் பெறப்படும் வாய்ப்பு உண்டு.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை உருவாகும் சாத்தியமும் உள்ளது.
இடியுடன் கூடிய மழை கொட்டும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கங்களால் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.