(அபூ உமர்)
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் 2025.12.10ம் திகதி அட்டாளைச்சேனை சரா பீச் ரிசோர்டில் நடைபெற்றது.
நாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அடுத்த கட்ட உதவிகளை வழங்குவதற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனைப் பகுதியிலிருந்து சிறப்பு குழுவொன்று செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சியின் புதிய அனர்த்த குழு அமைக்கப்பட்டதுடன் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான எஸ்.ஐ.றியாஸ், ஐ.எல்.அஸ்வர் சாலி, ஏ.சி.நியாஸ், ஏ.எல்.பாயிஸ், ஏ.பி.எம்.சரீப்(Rtd.DRDO)தலைவர்-MPCS, என்.சம்சுதீன்(Rtd.ISA), ஐ.எல்.நசீர்(Ex.MPS), எம்.எல்.கலீல்(Ex.MPS), பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.ஏ.அன்சார்(Rtd.Pr), அட்டாளைச்சேனை பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


