(கல்முனை செய்தியாளர்)
கல்முனை கல்வி வலயத்தில் பணியாற்றும் அதிபர்களை உள்ளடக்கிய குழுவொன்று அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பையை அட்டாளைச்சேனை மக்கள் பணிமனையில் சந்தித்தது.
இச் சந்திப்பின் போது தாங்கள் தற்போது எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


