Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted on December 19, 2025 by Admin | 200 Views

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள், மேலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் சுமார் 75 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும் வாய்ப்பும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மேலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் உண்டாகும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.