அட்டாளைச்சேனை மருதையடி பகுதியில் இன்று(22) இரவு இடம்பெற்ற திடீர் போக்குவரத்து விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்றதும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவருக்கு உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


