Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இந்தியா அணி அபார வெற்றி

Posted on December 23, 2025 by Admin | 172 Views

இந்தியா – இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே குவித்தது. இலங்கை அணிக்காக ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ஓட்டங்களுடன் அதிகபட்சமாக பங்களித்தார்.

இதனைத் தொடர்ந்து 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணி 11.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் செஃபாலி வர்மா 69 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.