Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இன்று பலப்பரீட்சை நடாத்தும் இந்தியா – இலங்கை அணிகள்

Posted on December 28, 2025 by Admin | 148 Views

சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டி இன்று (28) திருவனந்தபுரத்தில் இரவு 7.00 மணிக்கு தொடங்கவுள்ளது.

இரு அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடராக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஏற்கனவே இந்த இருபதுக்கு-20 தொடரை கைப்பற்றியுள்ளது.