(அட்டாளைச்சேனை செய்தியாளர்- வாஜித்)
“மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப் பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில் இன்று (28.12.2025) அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விஷேட அதிதிகளாக பிரதேச சபையின் உதவித் தவிசாளர் எம்.எப். நஜீத், பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான எம்.எஸ்.எம். நிஹால், எம்.எல். றினாஸ், எம்.எல்.ஏ. சமன், பி.எச்.ஜி. டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஜீ. முபாரக், பாலமுனை அல்-ஹிதாயா பாடசாலை அதிபர் எம்.ரி.எம். சியாத், டி.பி. ஜாயா வித்தியாலய அதிபர் ஒ.எல்.எம். றிஸ்வான், போட்டி நிகழ்ச்சிகளின் நடுவர்கள், எழுத்தாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் விழாவில் பங்கேற்றனர்.
நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் சிறப்பாக சாதனை புரிந்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.







