(அபூ உமர்)
மக்கள் காலடிக்குச் சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய பொதுமக்களுக்கு உடனடி மற்றும் நீடித்த தீர்வுகளை வழங்குவதற்காக திணைக்கள தலைவர்களுடனான களவிஜயம் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் 2025.12.29ம் திகதி அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், அட்டளைச்சேனை பிரதேச சபையின் உதவி தவிசாளர் கௌரவ எப். நஜீத், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஜீ. முபாரக், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் பாரி, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. சுஜீதரன், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.சாஹிர், அக்கறைப்பற்று பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி, அட்டாளைச்சேனை, விவசாய குழுக்களின் பிரதிநிதிகள், கோணாவத்தை அபிவிருத்திக் குழுத் தலைவர் ஐ.எல். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




