(அட்டாளைச்சேனை செய்தியாளர் வாஜித்)
முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சவூதி அரேபியா தூதுவராலயத்துடன் இணைந்து நடத்திய அகில இலங்கை அல்குர்ஆன் மனனப் போட்டியில் அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியின் மனனப் பிரிவு மாணவியான நியாஸ் பாத்திமா சம்ஹா தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி தகுதி பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 2,000 போட்டியாளர்களும் நாடளாவிய ரீதியில் சுமார் 10,000 மாணவ, மாணவிகளும் பங்கேற்ற இந்தப் போட்டியில், தேசிய ரீதியில் 200 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்தத் தெரிவில் அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியின் ஒரு மாணவி இடம்பிடித்திருப்பது அட்டாளைச்சேனை கல்விச் சமூகத்திற்குப் பெருமைக்குரிய விடயமாகும்.
கடந்த மாதம் புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியின் மூன்றாவது ஹாபிழாவாகவும் நியாஸ் பாத்திமா சம்ஹா திகழ்கிறார்.
இம்மாணவி அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் MI. நியாஸ் (நளீமி) மற்றும் MHM. றிபானா ஆசிரியை ஆகியோரின் மூத்த புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய மட்டப் போட்டியிலும் அவர் சிறந்த வெற்றி பெற வாழ்த்துகள்.