அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் கலாநிதி ஹனீஸ் தலைமையில் விசேட குழு நியமனம்.
அட்டாளைச்சேனை பள்ளிவாசல் தலைவர்கள், உலமா சபை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர்கள், குவாசி,
மரைக்காயர்கள், அல்- இபாதா கலாசார மன்றத்தின் உறுப்பினர்கள் ஆகியோருடனான விசேட கூட்டம் நேற்று 03.01.2026 (சனிக்கிழமை) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது பின்வரும் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
1.அட்டாளைச்சேனையில் சகல தரப்பினரையும் உள்ளடக்கியதான சூரா கவுன்சில் ஒன்றை உருவாக்குதல்.
2 அட்டாளைச்சேனையில் அனர்த்த முகாமைத்துவ குழுவினை உருவாக்குதல்.
இக்குழுவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ்.யு.எம். நியாசி, செயலாளர் அல்ஹாஜ் என்.ரி நசீர் மெளலவி( ISA), மரைக்காயர் சபைத் தலைவர் ஏ.பி.எம்.காதர், செயலாளர் என். சம்சுதீன் (Rtd. ISA), அட்டாளைச்சேனை குவாசி அல்ஹாஜ்.ஏ.சி.சைபுடீன், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச முஸ்லிம் விவாகப் பதிவாளர் மௌலவி எம். ஐ. சப்ரி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதியன்று விசேட கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை அல்- இபாதா கலாசார மன்றத்தினால் 15 வது வருடமாக இவ்வருடம் நடைபெறவுள்ள புனித ரமலான் மாத ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வு மற்றும் இப்தார் நிகழ்வுகளை சிறப்பாக நடாத்துவதற்குரிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக அட்டாளைச்சேனை பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி எம்.எச்.றஸ்மி தலைமையில் அட்டாளைச்சேனை அதிபர்கள் உள்ளடங்கியதான விசேட குழு நியமிக்கப்பட்டதுடன் இக் குழுவின் செயலாளராக அதிபர் ஓ.எல்.எம் ரிஸ்வான் தெரிவு செய்யப்பட்டார்.







