(ஒலுவில் செய்தியாளர் மனாப்)
அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் – ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் முதலை தாக்குதலுக்கு உள்ளான நபரின் உடல் இன்று (05) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய மதிக்கத்தக்க அப்துல் குத்தூஸ் ரமீஸ் என்பவராவார். இவர் நேற்று (04.01.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ஒலுவில் ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் முதலை தாக்கியதில் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இரு நாட்கள் தொடர்ந்த நிலையில் இன்று(05) காலை 10.20 மணியளவில் அவரது உடல் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
மீட்பு பணிகளில் ஒலுவில் பகுதி பொதுமக்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர், சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படை பிரிவினர் மற்றும் அல்-உஸ்வா சம்மாந்துறை ஜனாசா அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.


