பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 335 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 340 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றரின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 279 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும் 318 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றரின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை 323 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் மண்ணெண்ணெய் லீற்றரின் விலையும் 2 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 182 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அது 294 ரூபாவிற்கே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.