(அட்டாளைச்சேனை செய்தியாளர்-ஜெஸீல்)
அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தின் புதிய பிரதி அதிபராக அட்டாளைச்சேனையை சேர்ந்த ஏ.கே. முஹம்மட் அனீஸ் (SLPS) நேற்று (05) அதிகாரப்பூர்வமாக கடமையேற்றார்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மர்ஹூம் ஆதம் கண்டு மற்றும் ஸாலிஹா தம்பதிகளின் புதல்வரான இவர் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி வரை பயின்றதுடன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா (NDT – Science) , இளங்கலை கல்வி (B.Ed) ஆகிய பட்டங்களையும் பெற்ற இவர் 2001 ஆம் ஆண்டு முதல் விஞ்ஞான ஆசிரியராக கல்விச் சேவையில் இணைந்தார்.
2016 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பிரதி அதிபராக சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

