நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து வெளியிடும் manthri.lk இணையதளம் 2024 நவம்பர் மாதம் முதல் 2025 அக்டோபர் மாதம் வரை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் 225 உறுப்பினர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த தரவரிசையில் திகாமடுல்ல மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எம்.எஸ். உதுமாலெப்பை முதல் இடத்தைப் பெற்று முன்னிலை வகித்துள்ளார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. நிசாம் காரியப்பர்
2. முஜிபுர் ரஹ்மான்
3. ரஊப் ஹக்கீம்
4. மரிக்கார்
5. உதுமாலெப்பை
6. இம்ரான் மஃறூப்
7. ஹிஸ்புல்லாஹ்
8. கபீர் ஹாசீம்
9. ரிசாட் பதியுதீன்
10. காதர் மஷ்தான்
மேலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மொத்த நாடளாவிய ரீதியிலான தரவரிசையில் நிசாம் காரியப்பர் 14வது இடத்தையும், ரஊப் ஹக்கீம் 22வது இடத்தையும், எம்.எஸ். உதுமாலெப்பை 50வது இடத்தையும், ரிசாட் பதியுதீன் 69வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் எம்.ஏ.எம். தாஹிர் 86வது இடத்தையும், எம்.எஸ். அப்துல் வாஸித் 144வது இடத்தையும், அபூபக்கர் ஆதம்பாவா 155வது இடத்தையும் பெற்றுள்ளதாக manthri.lk வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.