அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் அல்ஹிதாயா வட்டாரத்திற்குட்பட்ட பாலமுனை 03ஆம் பிரிவு புதிய தபாலக வீதியின் கல்வெட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வேலைத்திட்டத்திற்கு தேவையான அனுமதிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களுக்கும், குறித்த வீதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் இத்திட்டத்தை முன்மொழிந்த பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ. ஸிறாஜ் அவர்களுக்கு ஆதரவு வழங்கிய கௌரவ உதவித் தவிசாளர் பாறூக் நஜி, முன்னாள் தவிசாளரும் கௌரவ உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் ஆகியோருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிர்மாணப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கும் அல்ஹிதாயா வட்டார மக்கள் சார்பில் மனப்பூர்வமான நன்றியை பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ. ஸிறாஜ் தெரிவித்துள்ளார்.