அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கபூர் வீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் இன்று (9) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின்படி, குறித்த மாணவன் தனது வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
16 வயதுடைய இந்த மாணவன் கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் மாணவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் மரணம் தொடர்பான முழுமையான உண்மைகள் குறித்து சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.