Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தம் 2027க்கு ஒத்திவைப்பு

Posted on January 13, 2026 by Admin | 158 Views

தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள 6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் முழுமையாக மீளாய்வு செய்து அவற்றை 2027ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 1ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டில் எந்த மாற்றங்களும் இன்றி தொடர்ந்து அமல்படுத்தப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய 6ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் கல்வி அமைச்சும் முன்னெடுத்த விசாரணைகளின் அறிக்கைகள் அடிப்படையில் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் ஐந்து முக்கிய தூண்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார். அவையாவன

  1. மனிதவள மேம்பாடு
  2. உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்
  3. மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள்
  4. பாடத்திட்ட மேம்பாடு
  5. பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு என அவர் விளக்கினார்.