(அக்கறைப்பற்று செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பாத்திமா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி மாணவியர்களின் திறன் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட மாணவியர் மன்றத்தின் 2026ஆம் ஆண்டிற்கான முதலாவது நிகழ்வு “Talk Time – Let’s Talk in English” என்ற தொனிப்பொருளில் கல்லூரியின் அதிபர் றயீஸ் முப்தி(ஹாமிதி) அவர்களின் தலைமையில் 2026.01.17ம் திகதி சனிக்கிழமை விமரிசையாக கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ அல் ஹாபிழ் என்.எம்.எம். அப்துல்லாஹ் அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் ஆளுநர் சபையின் கௌரவ உறுப்பினர்களும் நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வின் போது கௌரவ நீதிபதி அவர்கள் மாணவியர்களுக்கு வாழ்க்கை மற்றும் கல்வி முன்னேற்றம் தொடர்பான ஆழமான உபதேசங்களை வழங்கி அவர்களின் திறன்களையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள ஊக்கமளித்தார்.
