இணையவழி ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுவந்த ஒரு குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர் தொடர்புடையவர்கள் எனவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், தரமான தளபாடங்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதாகவும் அதற்கான உத்தரவாதம் வழங்கப்படுவதாகவும் கூறி இணையத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த விளம்பரங்களின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து திட்டமிட்ட முறையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.