நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் பனி உறைவு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.