உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் தாக்கமாக இலங்கையிலும் இன்று (19) தங்க விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ள நிலையில் அதன் பிரதிபலிப்பாக உள்ளூர் சந்தையிலும் தங்க விலை அதிகரித்துள்ளது.
அதன்படி இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 3,000 அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று நிலவும் தங்க விற்பனை நிலவரப்படி 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபா 340,400 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபா 368,000 ஆக அதிகரித்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.