(பொத்துவில் செய்தியாளர் – முஸால்)
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (28.01.2026) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி சம்மந்தமாக விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், கே.கோடிஸ்வரன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்