(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ௨மர்)
அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.அஸ்மி (SLTES) அவர்கள் லெப்டினன்ட் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். இவர் பொத்துவில் மத்திய கல்லூரி மற்றும் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
ஜனாதிபதியினால் 2026 ஜனவரி 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில், 2023 செப்டம்பர் 9 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் குறித்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.