(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இவ்வருடம் (2026) புதிய பாடத்திட்டத்திற்கமைவாக தரம் ஒன்றில் கல்வி பயில இணைந்துள்ள மாணவ மொட்டுக்களை வரவேற்கும் கால்கோள் விழா “ஆரம்ப கல்விக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம்” எனும் தொனிப் பொருளில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அஜ்மீர் தலைமையில் இன்று(29) பாடசாலையின் கேட்போர் கூட மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். பாயிஸ் ,சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை விரிவுரையாளர் எஸ்.எல்.எம். குபைதுல்லாஹ், ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் ஓய்வுநிலை அதிபர் ஏ.பி. கமால்டீன், கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் அதிபர் ஏ.அஷ்ரப்(ஷர்க்கி), சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. இல்முடீன், தொழிலதிபர் எம்.ஐ. சியாத், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஐ.எல். றியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் பிரதி அதிபர்களான ஏ.ஆர். ஜப்ராஸ், ஏ. பனீஸ், ஆரம்பப் பிரிவு வலயத் தலைவரும் சிரேஷ்ட ஆசிரியருமான எஸ்.எல். தாஜுதீன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் விழாவில் பங்கேற்றதுடன புதிய மாணவர்களை மகிழ்ச்சியாக வரவேற்கும் வகையில் சிறுவர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது.