(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் கல்வி கற்க இணைந்த புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் எஸ்.எம். சாகிர் ஹூஸைன் தலைமையில் இன்று (29) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக ஓய்வுநிலை அதிபர் எம்.ஏ. அன்சார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம். ஜெஸீல், ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ. சப்ரி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் ஓய்வுநிலை அதிபர்களான ஏ.எல்.கே. முஹம்மட், எம்.ஏ. அப்துல் ஹை, ஓய்வுநிலை ஆசிரியரான ஏ.எல். யெஹ்யா, பிரதி அதிபர்களான எம்.எச்.எம். றமீஸ், எம்.எஸ். எம்பாஹிம் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
