(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை ரிபி ஜாயா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் கல்வி கற்க இணைந்த புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா அகரத்திற்கு ஆரம்பம் சிகரத்திற்கு ஆயத்தம் எனும் தொனிப் பொருளில் 2026.01.29ம் திகதி பாடசாலையின் அதிபர் ஓ.எல்.எம்.றிஸ்வான் தலைமையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கெளரவ அதிதிகளாக PSI இணைப்பாளர் எம்.எல்.எம்.ஜாபிர், ஓய்வுநிலை அதிபர்களான ஏ.எல்.கே.முகம்மட், ஏ.எல்.ஜப்பார், எம்.ஏ.அன்சார், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எல்.ஏ.றஸ்ஸாக், எம்.ஐ.அன்சார் , ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத், பிரதி அதிபர் ஏ.எல்.நழீமுடீன், கிராம உத்தியோகத்தர் ஏ.எல்.நெளஸாட், ஏ.எல்.றிஸ்மி(CEO) கலந்துகொண்டனர்.
சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்கப்பட்ட புதிய மாணவர்களுக்கு இந்நாள் தம் வாழ்வின் சிறப்பான நாளாக அமைந்திருந்தது.



