இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகிய இரு எரிபொருள் வகைகளின் விலைகள் லீட்டருக்கு ரூ.2 வீதம் குறைக்கப்பட்டுள்ளன.
திருத்தத்துக்குப் பிந்தைய புதிய விலைகள் வருமாறு:
அதேவேளை ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவை முன் நிலவிய விலைகளிலேயே விற்பனை செய்யப்படும் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மாற்றமின்றி தொடரும் எரிபொருள் விலைகள்:
இந்த புதிய விலைத்திருத்தம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.