Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 17, 2026

பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறவுள்ள இந்தியா -பாகிஸ்தான் டி20

Posted on February 15, 2026 by Admin | 150 Views

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முக்கியப் போட்டி இன்று (15) கொழும்பில் அமைந்துள்ள ஆர். பிரேமதாச மைதானம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரவு ஆட்டமாக நடைபெறும் இந்தச் சந்திப்பு, உள்ளூர் நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும். இது தொடரின் ‘A’ குழுவுக்கான முக்கியமான போட்டியாகும்.

இந்தப் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு தரப்புகளில் கவனம் பெற்றிருந்த நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி நிறைவு செய்யப்பட்டுள்ளதாக Sri Lanka Cricket நிறுவனத்தின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். விசேட பாதுகாப்பு வளையத்துக்குள் போட்டி நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2026 டி-20 உலகக் கிண்ணத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடைபெறுமா என்பது குறித்து அண்மையில் பெரும் சர்ச்சை நிலவியது. இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் பதற்றம் காரணமாக போட்டி உறுதிப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டிருந்தது. தொடக்கத்தில் போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான், பின்னர் Anura Kumara Dissanayake ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து பங்கேற்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், போட்டிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் நேற்று முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளதாக Sri Lanka Cricket அறிவித்துள்ளது. எனவே, ரசிகர்கள் டிக்கெட் பெறும் நோக்கில் மைதானத்துக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

போட்டியை முன்னிட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 2,000 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 600 போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்கு மேலாக, முப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

டி-20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கையை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.