Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

சிறப்பாக நடைபெற்ற அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட ஹதீஸ் மஜ்லீஸின் ஆரம்ப நிகழ்வு

Posted on February 21, 2026 by Admin | 192 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

புனித ரமழான் மாதத்தின் மாண்பை போற்றும் வகையில் அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வின் 15வது வருட ஆரம்ப நிகழ்வு ஹதீஸ் மஜ்லீஸ் குழுவின் தலைவர் ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.சப்ரி தலைமையில் அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி வளாகத்தில் இன்று சனிக்கிழமை(21) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்க வைபவத்தில் அப்ரார் பவுண்டேசனின் பணிப்பாளர் ஏ.எம். அக்ரம் (நழீமி) அவர்கள் விசேட சொற்பொழிவை நிகழ்த்தி ஆன்மீக உணர்வு, மத நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணங்களை வளர்ப்பதன் அவசியத்தினை வலியுறுத்தினார்.

ரமழான் மாதத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக நடைபெறவுள்ள ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வுகள் சமூகத்தில் மார்க்க அறிவை பரப்புவதோடு நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மெளலவி என்.ரி.நசீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.எல்.எம். ஹனீபா, பொத்துவில் பிரதேச செயலாளர எம்.ஏ.சி.அஹமட் நசீல், உலமாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அல் இபாதா கலாசார மன்ற நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.