(அட்டாளைச்சேனை செய்தியாளர்-அஷ்ரப்)
அட்டாளைச்சேனை கோணாவத்தை அபிவிருத்திக் குழுவின் வருடாந்த இப்தார் நிகழ்வு தலைவர் ஐ.எல். நசீர் தலைமையில் அட்டாளைச்சேனை ஹனீபா ஹாஜியார் மண்டபத்தில் 2026.02.25ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கோணாவத்தை ஆற்றை அழகுபடுத்தி பாதுகாப்பது, ஆற்றின் இருபுறங்களிலும் அதற்குச் சொந்தமான காணிகள் சட்டவிரோதமாக சுவீகரிக்கப்படுவதைத் தடுப்பது, சட்டவிரோதமாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் கோணாவத்தை பகுதியின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் வழிகாட்டுதலில் 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் இன்று வரை இக்குழு பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினரால் வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்வின் தொடர்ச்சியாக இவ்வருட(2026) இப்தார் நிகழ்வு உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்றது.
