35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவினை முன்னிட்டு பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டி பொத்துவில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கபூர் அன்வர் தலைமையில் அண்மையில் சிறப்பாக பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பொத்துவில் பிரதேச இளைஞர் கழகத்தின் முன்னாள் சம்மேளனத் தலைவர்களான B. வசூர்கான், IL. ஹில்முடீன் மற்றும் MAM. நௌபல் ஆகிய மூன்று சம்மேளனத் தலைவர்களும் பொத்துவில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கபூர் அன்வர் தலைமையில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இன் நிகழ்வில் பொத்துவில் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர், பொத்துவில் பிரதேச செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மேளன நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

