(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபைக்கான ஒன்பது உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் விசேட பொதுச் சபைக் கூட்டம் இன்று (02.10.2025) காலை 9.00 மணிக்கு சங்கத் தலைமைக் காரியாலயக் கூட்ட மண்டபத்தில் கல்முனை பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இயக்குநர் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஜே.எம். பைறூஸ் தலைமையிலான அணியினர் இம்முறை இயக்குநர் சபையில் இரண்டு உறுப்பினர்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.