இன்று கொழும்பு ஸாஹிரா வித்தியாலயத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான கலாசாரப் போட்டியில் அரபு எழுத்தணி சிரேஷ்ட பிரிவில் பங்கேற்ற அட்டாளைச்சேனை தேசிய்பாடசாலை மாணவி செல்வி எம்.எஸ்.எப். அனூப் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இச் சாதனையானது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு பெருமையைச் சேர்த்துள்ளது.
பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ், மாணவிக்கு வழிகாட்டியாக இருந்து பிரேத்தியேக பயிற்சி வழங்கிய அஸ்சேய்க் ஜுணைத்தீன் (இஸ்லாம் பாட சிரேஷ்ட ஆசிரியர்), கலாசாரக் குழு ஆசிரியர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்கள், அக்கரைப்பற்று வலய கல்வி பணிப்பாளர் A.M. ரஹ்மத்துல்லாஹ், பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர் (இஸ்லாம்) மற்றும் ஆசிரிய ஆலோசகர் (இஸ்லாம்) ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.